நாடாளுமன்றப் பகுதியில் மோதல்! – 42 பேர் காயம்

image 5e06828c29

நாடாளுமன்றப் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலையால் 42 பேர் காயமடைந்துள்ளனர்.

இரு பொலிஸார், ஒரு இராணுவ அதிகாரி, இரு ஊடகவியலாளர்கள் என 42 பேரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தைப் பாதுகாக்கவும், போராட்டக்காரர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவுறுத்தப்பட்டது.

அதேவேளை, காயமடைந்த இராணுவ சிப்பாய் ஒருவரிடமிருந்த ரி- 56 ரக துப்பாக்கியொன்றும், 60 தோட்டாக்களுடன் இரு மகசின்கள் காணாமல்போயுள்ளன.

இதுகுறித்து பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version