கோவிட் தொற்று காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் புத்தகசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
கடுமையான சுகாதார வழிகாட்டல்களுடன் இந்தப் புத்தகசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
புத்தகசாலைகளுக்குள் ஒரேநேரத்தில் உள்நுழைவோரின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேவையான புத்தகங்களை மட்டுமே காண்பித்து கேட்டுப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையும் சில புத்தகசாலைகளில் பின்பற்றப்படுகின்றன.
மேலும் வேறு சில புத்தகசாலைகளில் புத்தகங்களை தொடாது பெயரைக் கூடி கேட்டுப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன அறியமுடிகின்றது.
புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே புத்தகசாலைகள் திறப்பதற்கான அனுமதி பொலிஸ்மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளது.
Leave a comment