தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் சுரேஷ் சலே.

Suresh Sally 16 1

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொ்ளளப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜூன் 7ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சலே, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக இதயவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருந்தார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் சலே நீண்ட நாட்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார் என்பதுடன், இந்த நிலையில் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புக்களின் அடிப்படையில் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version