பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனை ஓன்றின் போது, பெருமளவிலான நாய்கள் வளர்க்கப்படும், மிகவும் அசுத்தமான நிலையில் காணப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போதே, அங்கிருந்து உயிருள்ள டெங்கு நுளம்புக் குடம்பிகள் மற்றும் குறித்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில், காவல்துறையினரால் குறித்த துப்பாக்கி பொறுப்பேற்கப்பட்டதுடன், வீட்டின் உரிமையாளரான பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நடவடிக்கையானது பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால், இராணுவம், விமானப்படை, இலங்கை பொலிஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அழித்து, டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

