” ஜனாதிபதி விரும்பினால் அவருக்கு எந்நேரத்தில் வேண்டுமானாலும் பதவி விலக முடியும். ” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
” தாம் நினைத்தால் பதவி விலகும் ஏற்பாடு ஜனாதிபதிக்கு உள்ளது. இது தொடர்பில் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிவிட்டு அதனை அவர் செய்யலாம்.
புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்யும்வரை, பிரதமர் ஜனாதிபதியாக செயற்படலாம்.
ஆனால் மஹிந்த ராஜபக்ச இரண்டு தடவைகள் ஜனாதிபதி பதவியை வகித்துவிட்டார். எனவே, சிக்கல் நிலை ஏற்பட்டால் அடுத்த வாய்ப்பு சபாநாயகருக்கு உள்ளது. ” என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment