ஜனாதிபதியின் வீடு சுற்றிவளைப்பு உட்பட நாட்டில் இடம்பெற்ற சில சம்பவங்களால், மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ பாதுகாப்பு சபை கூடியது, அதன்போது நிலைமை மீளாய்வு செய்யப்பட்டது. அதற்கிணங்கவே அவசரகால சட்டம் மீளப்பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு உரிய வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிதி அமைச்சர் நியமிக்கப்படுவார். இதில் குழப்பம் அடைய தேவையில்லை.” – என்றும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment