விமல் கம்மன்பில வாசுதேவ
அரசியல்இலங்கைசெய்திகள்

சுயாதீன எம்.பிக்கள் எதிரணிப் பக்கம் அமர்வார்களா? – சபாநாயகருடன் இன்று முக்கிய சந்திப்பு

Share

ராஜபக்ச அரசிலிருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றில் ஆசனங்களின் ஒழுங்குப்படுத்தல்கள் தொடர்பில் இதன்போது சபாநாயகருக்கு யோசனை முன்வைக்கவுள்ளது எனக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், தற்போது நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்வது தொடர்பில் இதன்போது இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தயாசிறி ஜயசேகர, மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ணவுடன், விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேம ஜயந்த மற்றும் அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் ஏனைய கட்சிகளைபி பிரதிநிதித்துவப்படுத்தி இன்றைய சந்திப்பில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நயினாதீவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை: சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவுப் பகுதியில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் நேற்று...

04 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் எரிபொருள் விலையில் அதிரடி உயர்வு: நள்ளிரவு முதல் புதிய விலை பட்டியல் அமுல்!

நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின்...

03 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு வட்டியற்ற கடன்: தேசிய சேமிப்பு வங்கியும் இணைப்பு!

க.பொ.த (உயர்தரம்) தேர்வில் சித்தியடைந்தும், இடப்பற்றாக்குறை மற்றும் பொருளாதாரக் காரணங்களால் அரச பல்கலைக்கழகங்களில் நுழைய முடியாத...

02 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க கைது!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) பிரசாத் ரணசிங்க, இலஞ்ச...