8 56
இலங்கைசெய்திகள்

சாலையில் வெடிகுண்டுகளை புதைக்கும் ஹமாஸ்: IDF வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

Share

சாலையில் வெடிகுண்டுகளை புதைக்கும் ஹமாஸ்: IDF வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

வடக்கு காசா பகுதியில் சாலையோரம் ஹமாஸ் செயற்பாட்டாளர்கள் வெடிகுண்டுகளை புதைத்து வைக்கும் காட்சிகளை இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) வெளியிட்டுள்ளது.

ஜபாலியாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனையில் இருந்து வெறும் 45 மீட்டர் தொலைவில் குறித்த குண்டுகள் வைக்கப்படுவதாக (IDF) தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய மருத்துவமனையில் கடந்த வாரம் இராணுவ சுற்றிவளைப்புக்களின் போது, ​​மருத்துவ மையத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற பல ஹமாஸ் செயற்பாட்டாளர்களை துருப்புக்கள் கொன்றதாக IDF கூறுகிறது.

அத்தோடு, டசின் கணக்கான ஹமாஸ் செயல்பாட்டாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களால் அப்பகுதியில் புதைக்கப்பட்ட பல வெடிபொருட்கள் செயலிழக்க செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காசாவில் IDF ஆல் கண்டுபிடிக்கப்பட்ட ஹமாஸ் செயற்பாட்டாளர்களால் எடுக்கப்பட்ட காணொளியானது, அருகில் வெடிபொருட்களை புதைத்து வைப்பதைக் காட்டுகிறது.

ஹமாஸ் அமைப்பு காசா பகுதியில் உள்ள மக்கள் மற்றும் சிவில் நிறுவனங்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் வகையில் முறையில் பயன்படுத்தியதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு என்று IDF மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Soul Beach hotel
இலங்கை

தந்தைக்கு பலலட்சம் வாடகை கொடுத்த ஷிரான் பாசிக் – திட்டமிட்ட பணச்சலவையா?

ஷிரான் பாசிக்கின் சோல்பீச் ஹோட்டலில் அமைக்கப்பட்ட ஓமான் ஹோல்டிங்ஸ் கூட்டு நிறுவனத்தின் கட்டடத்திற்காக தனது தந்தைக்கு...

நவாலி திருவிழா
இலங்கை

நவாலி திருவிழாவிலும் அசம்பாவிதம் – பொதுமக்கள் பலரும் பாதிப்பு!

நேற்று இரவு, நவாலி அந்திரான் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது வாணவேடிக்கையால் பனை மரம் ஒன்றும்...

dengue original 1
இலங்கை

எழுபதை கடந்தது டெங்கு மரணங்கள்!

2026 இன் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 93,381 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...

சுற்றிவளைப்புக்கள்
இலங்கை

அதிரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்புக்கள் – 751 சந்தேக நபர்கள் கைது!

முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 751 சந்தேகநபர்கள் கைது...