கர்ப்பிணிப்பெண் தற்கொலை – கொவிட் உறுதி!

dead

கர்ப்பிணிப்பெண் தற்கொலை – கொவிட் உறுதி!

வவுனியாவில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த கர்ப்பிணி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். அவருக்கு கொவிட் தொற்றும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

வவுனியா, மகாரம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனை அவதானித்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் குறித்த பெண்ணை கிணற்றில் இருந்து மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த கர்ப்பிணிப் பெண் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Exit mobile version