யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் கனடா – லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, சுமார் 8 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் மோசடியில் ஈடுபட்ட செய்த சந்தேகநபர் வெல்லம்பிட்டி பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலன்னாவ, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாயிஸ் மொஹமட் நப்டிகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், சந்தேகநபர் தலா 5 லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

