கிளிநொச்சியில் ஹாட்வெயார் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கனகபுரம் சேவியர் கடைச் சந்தியருகில் உள்ள தனியார் கடையொன்றிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, கரைச்சிப் பிரதேச சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் இராணுவம், பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என அறியமுடிகிறது.
#SrilankaNews