ஒட்சிசனை இறக்குமதி செய்யும் இலங்கை அரசு!!
கொரோனாத் தொற்றாளர்களுக்குத் தேவையான மருத்துவ ஒட்சிசன் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தயாரிக்கப்படும் ஒட்சிசன் வசதிகள், கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் ஒட்சிசன் இறக்குமதி செய்யப்படுகிறது.
ஒட்சிசனை இறக்குமதி செய்வதில் வரம்புகள் இருக்கும், வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் திடீரென இறக்குமதியை நிறுத்தலாம். இதனால், ஒட்சிசனை தயாரிக்கும் இயந்திரங்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அனைத்து மாற்று வழிகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
Leave a comment