எரிபொருள் தட்டுப்பாடு இல்லை- உதய கம்பன்பில
நாட்டில் எந்தவொரு எரிபொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுமாயின் அதுதொடர்பில் பொதுமக்களுக்கு தான் அறியத்தருவேன் எனவும் அமைச்சர் தனது ருவிற்றர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. கையிருப்பிலுள்ள டீசல் 11 நாள்களுக்கும், பெற்றோல் 10 நாள்களுக்கும் மாத்திரமே போதுமானது என இலங்கை பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த நேற்று கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்தே அமைச்சர் மேற்கண்டவாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment