766776676
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எங்களின் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் பூமாலை போட்டு வரவேற்பு! – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கொந்தளிப்பு

Share

எங்களின் நிலத்தை ஆக்கிரமித்து அதனை பௌத்தமயமாக்க வந்தவர்களை எங்களின் ஒட்டுண்ணிகள் வரவேற்று பூமாலை அணிவித்து இருக்கின்றார்கள். இது எமது இனத்திற்கு அவர்கள் செய்யும் துரோகம் ஆகும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கொடூர யுத்தத்தை நடாத்தி , எமது இனத்தினை அழித்தவர்களுக்கு எதிராக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றினையை வேண்டும். இந்த காலகட்டத்தில் அரசாங்கம் ஆட்டம் கண்டு கொண்டு உள்ளது. இந்நேரத்தில் நாம் ஒற்றுமையாக ஒன்றிணைந்து போராட்ட முன்வர வேண்டும்.

இந்த இன்னல்கள் , அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாம் நேற்றைய தினம் போராட்டத்தினை நடாத்தி இருந்தோம்.

அதன் போது , வயது முதிர்ந்த தாய்மார்களை ஈவிரக்கமின்றி குண்டாந்தடிகளால் அடித்தும் , சப்பாத்து கால்கள் மிதித்தும் எங்களை அவமானப்படுத்தி அநாகரிகமாகவும் நடந்து கொண்டனர்.

எங்களின் நிலத்தை ஆக்கிரமித்து அதனை பௌத்தமயமாக்க வந்தவர்களை எங்களின் ஒட்டுண்ணிகள் வரவேற்று பூமாலை அணிவித்து இருக்கின்றார்கள். இது எமது இனத்திற்கு அவர்கள் செய்யும் துரோகம் ஆகும்.

எங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என சொல்ல முடியாதவர்கள் , இன்று மக்களுக்கு அரிசி இல்லை , பெற்றோல் இல்லை, டீசல் இல்லை என சொல்லுபவர்கள் வடக்கில் வந்து பொருளாதார நிலையத்தை திறக்கின்றார்கள்.

அவர்களிடம் கையளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை அறியும் வரையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான எங்களின் போராட்டம் தொடரும்.

எமக்கு பின்னால் நின்று எமக்காக குரல் கொடுக்க எமது தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

நேற்றைய போராட்டத்தின் போது எமது முல்லைத்தீவு மாவட்ட சங்க தலைவி அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதேவேளை வவுனியா மாவட்ட தலைவியும் காயங்களுக்கு உள்ளான நிலையில் நேற்றைய தினம் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, இன்றைய தினம் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

அவர் நடக்க முடியாத நிலையில் உள்ள போதும் அவருக்கு உடல் நிலை சரியாகி விட்டது என வைத்தியர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். வைத்தியர்கள் கூட அரசாங்கத்திற்கு பரிவட்டம் பிடிக்க தொடங்கி விட்டார்களோ என சந்தேகிக்கிறோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோர்முஸ் நீரிணை மூடல்: இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் என எச்சரிக்கை!

மத்திய கிழக்கின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திடீரென...

01 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணம் உயர்ந்தாலும் நீர்க் கட்டணத்தில் மாற்றமில்லை: தேசிய நீர் வழங்கல் சபை தகவல்!

நாட்டில் அண்மையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், தற்போதைக்கு நீர்க் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் ஏதுமில்லை...

01 36
செய்திகள்உலகம்

ஈரான் மீது தரைவழித் தாக்குதல்: பெண்டகன் தீவிர திட்டமிடல் எனத் தகவல்!

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், அடுத்தகட்டமாகப் பல வாரங்கள் நீடிக்கக்கூடிய...

01 35
இலங்கை

இலங்கையில் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை: 2026 இறுதிக்குள் விநியோகிக்கத் திட்டம்!

இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை (Digital ID) கட்டம் கட்டமாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம்...