யாழ். முதியவருக்கு டெல்டா தொற்று!!
யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனாச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு டெல்டா திரிபு வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என்று கூறப்படுகிறது.
இந்த நபருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில், அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
Leave a comment