ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், இந்த அரசும் உடனடியாக பதவி விலக வேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்தவர்கள்தான், இன்று எதிர்த்து நிற்கின்றனர். எனவே, தற்போது 20 ஐ அல்ல, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான நேரம் வந்துள்ளது. அதனை நாம் செய்தாக வேண்டும்.
அதிகாரங்கள் பிரதமருக்கு பகிரப்பட வேண்டும். ஆனால் நிறைவேற்று அதிகார பிரதமரை உருவாக்காத வகையில் அதிகாரங்கள் சமப்படுத்தபட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் கோலோச்சும்.
ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என மக்கள் வலியுறுத்திவருகின்றனர். எனவே, மக்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்து, அரசும் ஜனாதிபதியும் பதவி விலகவேண்டும்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment