மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ உரையாற்றியுள்ளார்.
அதில், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சி நாட்டில் இல்லாதிருந்தால், இலங்கை இதைவிட மிகவும் பாரதூரமானதொரு நிலைக்குத் தள்ளப்படுவது உறுதியாகியிருக்கும் என கூறியுள்ளார்.
மேலும், ஜனாதிபதியின் செயற்பாடுகளை கிரிக்கெட் விளையாட்டுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர் ஜனாதிபதி மிகவும் நேர்மையான முறையில் தனது கடமைகளை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
“உங்கள் ஜனாதிபதி மிக நேர்த்தியாக, நேர்கோட்டில் பந்தை எதிர்கொள்கிறார். அவரது பாணி உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் மிகவும் நேரடியான ஒரு நபர்” எனவும் பாராட்டியுள்ளார்.
மற்றும், அரசியல் நிலவரங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்காமல் இருக்க வேண்டுமாயின், அரசியல்வாதிகளுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தற்போதைய ஜனாதிபதியின் தலையீடு இல்லாதிருந்தால், நாட்டின் நிலைமை இதைவிடப் பல மடங்கு மோசமடைந்திருக்கக்கூடும் என்பதைத் தன்னால் உறுதியாகக் கூற முடியும் எனவும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

