செய்திகள்இலங்கைபிராந்தியம்

சேர். பொன் இராமநாதனின் 91 ஆவது குருபூசை அனுஷ்டிப்பு

pon 02 1
Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகாத்துக்கு அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுனரும், சைவப் பெரு வள்ளலாருமான சேர். பொன் இராமநாதனின் 91 ஆவது குருபூசை இன்று (08) புதன்கிழமை இடம்பெற்றது.

பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேகம், பூஜையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

pon 1

பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள சேர். பொன். இராமநாதனின் உருவச் சிலைக்கும், சபா மண்டபத்தினுள் உள்ள உருவப் படத்துக்கும் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மலர்மாலை அணிவித்து, வணக்கம் செலுத்தினார்.

இந்நிகழ்வில், சேர். பொன் இராமநாதன் அறக்கட்டளையின் சார்பில் பேராசிரியர் சி. சிற்றம்பலம் மற்றும் முன்னாள் துணைவேந்தரும், பேரவை உறுப்பினருமான பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை,

pon 01 1

பதிவாளர் வி. காண்டீபன், இந்து கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த முன்னாள் துறைத் தலைவர் பேராசிரியர் எம். வேதநாதன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன் முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...