விமானப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கேகாலை மற்றும் குருநாகல் பிரிவின் பாதுகாப்பு அதிகாரிகள் ஒன்றிணைந்து நடத்திய பாரிய சுற்றிவளைப்பில் வனவிலங்குப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுமார் 1050 கிலோ வல்லப்பட்டை (இதன் பெறுமதி 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது).5 கடமான் கொம்புகள், 3 மான் கொம்புகள், ஒரு தனி மான் கொம்பு மற்றும் பாதுகாக்கப்பட்ட அரிய வகை சிப்பிகள்.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு லொறி கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவு, ரிட்டிகல மற்றும் குருநாகல் வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மற்றும் நாரம்பெத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கேகாலை மற்றும் அலபலாவலவத்துர பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போது புலத்கோஹுபிட்டிய வனவிலங்கு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வனவிலங்கு சட்ட விதிகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்ட இவர்களை, விரைவில் கேகாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
