எரிபொருள் தட்டுப்பாடு – சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பூட்டு!

1638686697 1638684293 sapugaskanda L

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.

அந்நிய செலாவணி பிரச்சினையால், நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகின்றது. இந்நிலையிலேயே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் மூடப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 51 வருடங்கள் பழமையானது. இங்கு மின் உற்பத்திக்கு தேவையான 37 வீத எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகின்றது. பல வருடங்களுக்கு பிறகு அண்மையில் நிலையம் மூடப்பட்டது. இந்நிலையிலேயே மறுபடியும் மூடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version