நேற்றைய பாதீட்டு முன்வைப்பை அடுத்து, மதுபான வகைகளின் வரியில் சீராக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை (வகை 1) 96 ரூபாவினாலும், 750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை (வகை 2) 103 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய வரவு செலவுத் திட்ட முன்வைப்பை அடுத்து, மதுபான வகைகளின் வரியில் சீராக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதேவேளை 750 மில்லிலீற்றர் கொண்ட வெளிநாட்டு மதுபானத்தின் விலை 126 ரூபாவினாலும் உயர்வடைந்துள்ளது.
ஏனைய மதுபானங்களான 750 மில்லிலீற்றர் கொண்ட வைன் ஒன்றின் விலை 14.40 ரூபாவினாலும், பியர் (330மி.லீ – 5%க்கும் குறைந்த) விலை 3 ரூபாவினாலும், பியர் (330மி.லீ- 5 %க்கும் அதிகமான) விலை 14.96 ரூபாவினாலும் உயர்வடைந்துள்ளது.
இதனால் மதுப்பிரியர்கள் ஆழ்ந்த கவலையில் மூழ்கியுள்ளனர்.
#SrilankaNews
Leave a comment