இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் பூர்வாஞ்சல், ரேபரேலி, கோரக்பூர், லக்னோ, பரபங்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடாமல் அடைமழை பெய்து வருகிறது.
வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் விழுந்து மின்துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது. வீதிகளில் ஓடும் வெள்ளத்தால், வாகனங்கள் பல சேதம் அடைந்துள்ளன. சில இடங்களில் தண்டவாளங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
உத்தர பிரதேசத்தின் 30 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment