“அரசிலிருந்து எமது கட்சி வெளியேறாது. உள்ளே இருந்தபடி போராடுவோம்” – என்று லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுமீது பங்காளிக்கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி கடும் அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சி அரச கூட்டணியில் இருந்து விரைவில் வெளியேறும் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே மேற்படி தகவல்களை அக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ வித்தாரண நிராகரித்துள்ளார்.
” அரசுக்குள் சிற்சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கு முற்படுகின்றோம். உள்ளே இருந்தபடி தீர்வை காண்போம். வெளியேறும் எண்ணம் இல்லை. அதற்கான தேவையும் எழவில்லை.” – என்றும் திஸ்ஸ வித்தாரண குறிப்பிட்டார்.
#SriLankaNews