திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் விபத்துக்குள்ளான மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலத்தை இயக்கியவர்கள், அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
மிதப்புப் பாலத்தை பயன்படுத்துவதற்கான அனுமதியை கிண்ணியா உள்ளாட்சி சபையே வழங்கியுள்ளதாகவும், பயணிகள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் அளவுக்கு அது தரமானதாக இருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் நேற்று குழுவொன்றை அமைத்தார்.
கிழக்கு மாகாண பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா தலைமையிலான குறித்த விசாரணைக்குழு இன்று கூடவுள்ளது.
#SrilankaNews