கிண்ணியா குறிஞ்சாக்கேணி சம்பவம்:கிண்ணியா நகர சபைத் தலைவருக்கு விளக்கமறியல்..!!

1539338935phpNwmpsc

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாலம் கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். நளீமுக்கு நாளை (10) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (09) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் இவ்உத்தரவை வழங்கினார்.

குறித்த அனர்த்தம் தொடர்பில் படகின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவர் ஆகிய மூன்று சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்கும் உத்தரவு நேற்று (08) வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version