எரிவாயு அடுப்பு ஒன்று கேகாலை, ரோக் ஹில் – கஹடப்பிட்டிய பகுதியில் வெடித்துச் சிதறியுள்ளது
குறித்த சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
வீட்டின் உரிமையாளர் இன்று காலை தேனீருக்காக தண்ணீர் வைத்துவிட்டு குளியலறைக்கு சென்ற போது பலத்த சத்ததுடன் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும், எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#SrilankaNews

