பதுளை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில், மண்ணெண்ணெயைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வருசையில் காத்திருந்துள்ளனர்.
மண்ணெண்ணெய்க்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, பிரதேச மக்கள் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை முதல் நீண்டவரிசையில் காத்திருந்துள்ளனர்.
இதேவேளை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு, கொழும்பிலிருந்து குறைந்தளவிலேயே மண்ணெணய் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிடைக்கப்பெறும் மண்ணெண்ணெயில் தலா 5 லீற்றர் மண்ணெண்ணையே நுகர்வோருக்கு வினியோகிக்கப்படுவதாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment