Arundika Fernando
செய்திகள்அரசியல்இலங்கை

விவசாயிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறது ஐ.ம.ச: அமைச்சர் சாடல்

Share

விவசாயிகளை வீதியில் இறக்கி, அவர்கள் மூலம் அரசியல் பிழைப்பு நடத்துகிறது ஐக்கிய மக்கள் சக்தி.” என்று இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

“இரசாயன உரப் பயன்பாட்டை கைவிட்டு, சேதன பசளை மூலமான விவசாயத்தை நோக்கி உலக நாடுகள் பயணிக்கின்றன. இரசாயன உரம் என்பது நஞ்சு. எமது மக்களைக் காக்க நாமும் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்கின்றோம். அதற்காகவே உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. நிலைமை இவ்வாறிருக்கையில் விவசாயிகளை தூண்டிவிட்டு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் அவர்களின் போராட்டங்கள் ஊடாகவும் அரசியல் செய்கின்றது.

இரசாயன உரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு, ஆனால் எதற்காக தற்போது இரசாயன உரத்துக்கு குரல் கொடுக்கின்றனர் என்றும் தெரியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...