மீண்டும் காரைநகர் பிரதேச சபை பாதீடு தோல்வி!!

காரைநகர் பிரதேச சபைக்கு 10இல் புதிய தவிசாளர் தெரிவு

காரைநகர் பிரதேச சபையின் பாதீடு ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டது.

காரைநகர் தவிசாளர் விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் இயற்கை எய்தியமையிட்டு புதிய தவிசாளராக சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த மயிலன் அப்புத்துரை தெரிவுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் சமர்ப்பித்த  முதலாவது வரவுசெலவுத்திட்டம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று (21) இரண்டாவது பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் ஈபிடிபி உறுப்பினர்களுக்கும் இடையில் காராசார விவாதம் நடத்தப்பட்டது. இதனையடுத்து பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

பாதீட்டிற்கு ஆதராவாக ஈ.பி.டி.பி 2 அங்கத்தவரும் சுயேட்சைக்குழுவைச்சேர்ந்த 3 வாக்களித்திருந்தனர். எதிராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த 3 அங்கத்தவரும் ஐக்கிய தேசியகட்சியை சேர்ந்த 2வரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஒருவரும் வாக்களித்திருந்தனர்.

இதனையடுத்து ஒருவாக்கால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. இதனையடுத்து தவிசாளர் பதவியிழந்தார்.

Exit mobile version