காளியம்மாக்கு அரோகரா!! – நான் தற்போது பாரிஸ் நகரத்தில் உள்ளேன் பக்தர்களே!!

image 8a65ba2031

ஐம்பது வருடங்களுக்கு முன் தீட்டப்பட்ட காளியம்மன் ஓவியத்துக்கு பாரிஸ் நகரில் நடைபெற்ற நாகரிக அலங்காரக் கண்காட்சியில் பெரும் வரவேற்பு கிட்டியிருக்கிறது.

1971 ஆம் ஆண்டு ஓவியர் மாத்வி பரேக் இந்த ஓவியத்தை தீட்டியிருந்தார்.

இந்த கண்காட்சியில் மாத்வியின் கணவர் தீட்டிய ஓவியங்களுக்கு அருகாமையில் ‘த வேர்ள்ட் ஒப் காளி’ என்ற இந்த ஓவியமும் வைக்கப்பட்டிருந்தது.

கையில் ஆயுதங்களை ஏந்திய காளி நாகரிகத்தின் தலைநகரான பாரிஸ் நகரத்து நடையழகு மேடையில் தோன்றுவது போல அவர் தீட்டியிருந்த ஓவியத்துக்கு அப்போது எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

காளி ஓவியம் எம்ராய்டரி செய்யப்பட்டு இக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.

#WorldNews

 

Exit mobile version