கச்சதீவு அந்தோனியார் மகோற்சவம் – 500 பேருக்கு மட்டுமே அனுமதி!

VideoCapture 20220127 230132

யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11ம், 12ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கச்சதீவு தூய அந்தோனியார் ஆலய அருட்தந்தை வசந்தன் அடிகளார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா போிடர் நிலைமை காரணமாக இந்திய பக்தர்களுக்கு இம்முறையும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த 500 பேர் மட்டுமே கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருவிழாவில் பங்கேற்கும் அனைவரும் பூஸ்டர் டோஸையும் பெற்றிருக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது – என்றார்.

கச்சதீவு திருவிழா தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews #India

Exit mobile version