தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் கபளீகரம் செய்யப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதியிலா வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கப்படுகிறது? தமிழ் ஊடகவியலாளர்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரால் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுகிறார்கள். யாழ்ப்பாணத்தின் கரையோரங்களில் இறந்த உடலங்கள் கரை ஒதுங்குகின்றன.
இது தொடர்பாக எவ்வித விசாரணைகளும் இல்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
#SrilankaNews