இன்று காலை முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வச்சந்திரன் என்ற ஊடகவியலாளர் இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளானார்.
இது தொடர்பாக வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரிவு 14 கீழ் சொந்த பிரேரணையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் பரிசோதகரிடமும் 59 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் சம்பவம் தொடர்பான அறிக்கை கோரப்பட்டுள்ளன.
மேலும் காயமடைந்த ஊடகவியலாளரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment