கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என யாழ், மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்,
மேலும், கடந்த காலத்தில் அத்தியாவசிய பொருள்களான சீனி மற்றும் எரிவாயு போன்றவற்றுக்கு தட்டுப்பாடு காணப்பட்டது , தற்போது எரிவாயு பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது,
சீனியின் விலையும் தற்போது குறைவடைந்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலையில் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என கண்காணிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொருள்கள் விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது. வியாபாரிகள் நியாயமான விலையில் பொருள்களை விற்பனைசெய்ய வேண்டும் – எனத் தெரிவித்துள்ளார்.
Leave a comment