ஜப்னா கிங்ஸ் அணி ,கண்டி வொரியஸ் வீழ்த்தி வெற்றிக்கனியை சுவைத்துள்ளது.
லங்கா பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி, கண்டி வொரியஸ் அணியை 7 இலக்குகளால் வெற்றியிட்டியள்ளது.
லங்கா பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
முதலில் துடுப்பாடிய கண்டி வொரியஸ் அணி 12.2 ஓவர்கள் நிறைவில் 2 இலக்குகளை இழந்து 94 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழைகாரணமாக போட்டி சற்று நேரம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், டக்வத் லூயிஸ் முறையில் போட்டியை நடத்த நடுவர்கள் தீர்மானித்தார்கள்.
மீண்டும் தொடங்கிய போட்டியில் டக்வத் லூயிஸ் முறையில், 10 ஓவர்களில் 95 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 8.4 ஓவர்களில் 3 இலக்குகளை இழந்து வெற்றியை சூடியது.
#sports
Leave a comment