WhatsApp Image 2021 12 14 at 5.23.36 AM e1639439670416
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ் – முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு! – அச்சத்துடன் பயணிக்கும் மக்கள் (வீடியோ)

Share

யாழ்ப்பாணம் – முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு ஏற்பட்டு வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி செல்லும் புலோலி- கச்சாய் வீதியிலேயே இவ் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி பயணிப்பவர்கள் மற்றும் தென்மராட்சியில் இருந்து வடமராட்சி நோக்கி பயணம் செய்பவர்கள் இப் பாதையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இவ் வீதி புனரமைப்பு செய்யப்பட்டு ஒரு வருடமே ஆகின்ற நிலையில் முள்ளி ஐய்யங்கண்டி மயானத்துக்கு அருகாமையில் உள்ள பாலத்துக்கு அருகாமையிலேயே வெடிப்பு ஏற்பட்டு வீதி கீழ் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் தென்மராட்சி பிரதேச செயலர் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன் அடிப்படையில் தற்காலிகமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதனூடாக ஒரு வழிப் பயணத்தையே மேற்கொள்ள முடிகிறது.

அதனூடக பாரவூர்திகள் தொடர்ந்தும் பயணிப்பதால் முற்றான பயணத்தடை ஏற்பட வாய்ப்புள்ளதுடன் ஆபத்தான பயணமாக அமைந்து காணப்படுகிறது.

எனவே இது தொடர்பில் மக்கள் அவதானமாக பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...