யாழ். கடற்கரைகளில் தொடர்ந்து கரையொதுங்கும் சடலங்கள்!

ffbd4b75 dead

யாழ்ப்பாணத்தின் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரை மற்றும் மருதங்கேணி கிழக்கு சுண்டிக்குளம் கடற்கரை பகுதிகளில் இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்கரையோரங்களில் அண்மைக்காலமாக தொடர்ந்து சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன.

இந்த நிலையில், இன்றைய தினம் கரையொதுங்கிய இரு சடலங்களுடன் , கடந்த 6 நாட்களுக்குள் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

கரையொதுங்கிய தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன.

இதேவேளை, வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரு சடலங்களும் , நெடுந்தீவு கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சடலமும், மருதங்கேணி கடற்கரை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு சடலமும் கரையொதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version