யாழ்ப்பாணம்– கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக புகையிரத சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் கல்கிசை – காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவை நாளை மாலை ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி மாலை 5.30 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்படும் ரயில் காங்கேசன்துறையை வந்து மறுநாள் காலை 5.30 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு பயணிக்கவுள்ளது.
ஆயினும் முற்பதிவு தொடர்பான எந்தவித தகவல்களும் அறிக்கவிக்கப்படவில்லை.
யாழிலிருந்து கொழும்புக்கு ஒரு சேவையும் கொழும்பில் இரந்து யாழுக்கு ஒரு சேவையுமாக சாதாரண ரயில் சேவை மாத்திரமே ஆரம்பிக்கப்பட உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment