நாட்டில் தனிமைப்படுத்தல் கைதுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று காலை 6 ம,யுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் 67 பேர் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் 2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுகளுக்காக 80 ஆயிரத்து 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.
Leave a comment