தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் ஊடாக, ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் செயான் சேமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த உத்தரவாதத்தை வழங்கினார்.
” நாட்டு மக்களின் நலன் கருதியும், அரச சேவையை இலகுப்படுத்தும் நோக்கிலேயே இச்சட்டம் கொண்டுவரப்படுகின்றது. டிஜிட்டல் மயமாக்கல் என்பது முக்கியத்தும் பெறுகின்றது. எனினும், இச்சட்டமூலம் தொடர்பில் எதிரணியினர் போலி பிரச்சாரம் முன்னெடுக்கின்றனர். ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் எனவும் கூறுகின்றனர்.
ஊடக சுதந்திரத்துக்கு துளியளவும் அச்சுறுத்தல் ஏற்படாது. நாம் எதையும் ஒளிக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை.” – என்றார் இராஜாங்க அமைச்சர்.
#SriLankaNews
Leave a comment