கொரோனா மாத்திரையின் விலை இவ்வளவா…???

Pfizer Pills

கொரோனா சிகிச்சைக்கான பேக்ஸ்லோவிட்’ Paxlovid என்னும் மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதனையடுத்து, அமெரிக்காவுக்கு 10 மில்லியன் கொரோனா மாத்திரைகளை 5.3 பில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்ய இருப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை மதிப்பில் ஒரு மாத்திரையின் விலையானது சுமார் 107,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் ஒரு மாத்திரையின் விலை 39, 378 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இம் மாத்திரையானது, வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் அல்லது இறப்பு நிகழும் அபாயமுள்ள, நோயாளிகளுக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNews #WorldNews

Exit mobile version