1 18 scaled
இந்தியாசெய்திகள்

போன் பேசியபடியே சான்றிதழ் வழங்கும் மேயர் பிரியா! வறுத்தெடுக்கும் மக்கள்?

Share

போன் பேசியபடியே சான்றிதழ் வழங்கும் மேயர் பிரியா! வறுத்தெடுக்கும் மக்கள்?

செல்போனில் பேசிக்கொண்டே அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் மேயர் பிரியாவின் செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
நேற்று குடியரசு தின விழா கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கொண்டாடப்பட்டது. அங்கு மேயர் பிரியா ராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த விழாவில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அப்போது, சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளை அலட்சியப்படுத்தும் விதமாக மேயர் பிரியாவின் செயல் இருந்தது. மேயர் பிரியா சான்றிதழ் வழங்கும் போது, தனக்கு அருகே நின்று கொண்டிருந்த மகேஷ் குமார் என்பவரிடம் பேசிக்கொண்டே வழங்கினார்.

அதுமட்டுமல்லாமல், அவருக்கு அந்த நேரத்தில் செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. அப்போது அவர் போனை எடுத்து பேச ஆரம்பித்து விட்டார்.

பின்னர், அடுத்த சான்றிதழ் வழங்குவதற்காக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவருக்காக காத்திருந்தார். ஆனால் மேயர் பிரியா, கழுத்தை சாய்த்து வைத்து போனில் பேசியபடியே அதிகாரிக்கு சான்றிதழ் வழங்கினார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...