நாடாளுமன்றத்தில் எம்.பிக்களின் எண்ணிக்கை முக்கியமல்ல பெரும்பான்மை ஆதரவு என்பதும் முக்கியமல்ல.
ஆனால், மக்கள் அணிதிரண்டு வீதிக்கு வந்தால் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடவேண்டி வரும்’ என நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 02 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தின் 05 ஆம் நாளான இன்று உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முறையாக செயற்படாவிட்டால், தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை ஐக்கிய மக்கள் சக்தியினார் அவர்களின் ஆர்ப்பாட்டத்தினூடாக அரசாங்கத்துக்கு கற்பித்துள்ளனர்.
அவர் மேலும் உரையாற்றுகையில்;
127 உறுப்பினர்களுக்கும் பார்க்க மக்களின் எதிர்ப்பு பலமானது. அவர்கள் அணிதிரளும் போது அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அமெரிக்காவுக்குச் செல்ல நேரிடும்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பொய்யான எப்.சி.ஐ.டி ஒன்றை நியமித்து அப்போது எதிர்த்தரப்பிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறைப்பிடித்தார்கள். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும் சிறைப்பிடித்தார்கள். பல்வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்தார்கள்.
சிறையிலிருக்கும்போது அவரை நானும் நேரில் சென்று சந்தித்திருந்தேன். ஆகவே அவரின் மனதில் கட்டாயம் வைராக்கியம் இருக்கும். மக்கள் இந்த அரசாங்கத்துக்கு சாபம் விடுகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
#SrilankaNews