கொவிட் தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போதே, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கனடாவில் பொது இடங்களுக்குப் பிரவேசிக்கும்போது, பூரண தடுப்பூசியேற்றத்திற்கு உள்ளான அட்டையைக் கொண்டு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், ஐரோப்பிய நாடுகளில் பொது இடங்களுக்குத் தடுப்பூசி அட்டையைக் கொண்டு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதனை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
#SrilankaNews
Leave a comment