கட்டடம் ஒன்றில் இருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு − பிஸ்டல் வீதியிலுள்ள கட்டடத்திலிருந்தே குறித்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கட்டடத்தின் 5 ஆவது மாடியில் அமைந்துள்ள மலசலகூடத்தில் இருந்தே துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது..
இது தொடர்பில் தகவல் அறிந்து அங்க விரைந்த கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர், சம்பவ இடத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், அங்கிருந்து ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் 176 மற்றும் 9 மில்லிமீற்றர் துப்பாக்கிக்கு பயன்டுத்தப்படும் ரவைகள் 29 ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Leave a comment