குளிர்காலத்திற்குத் தேவையான பொருட்களை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சீனா அனுப்பி வைத்துள்ளது.
இதனையடுத்து சுமார் 70 ஆயிரம் போர்வைகள் மற்றும் 40 ஆயிரம் கோட்டுகள் உள்ளிட்டவற்றை சீனா வழங்கியுள்ளது.
அத்துடன் 10 நாட்களுக்குள் ஏழை, எளிய மக்களுக்கு வினியோகிக்கப்படும் என ஆப்கானிஸ்தானின் அகதிகள் மற்றும் மறுவாழ்வுத்துறை இணை அமைச்சர் அர்சலா கரோட்டி தெரிவித்துள்ளார்.
#WorldNews
Leave a comment