செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தோன்ற மதுபான கடைகள் காரணம் என ஹெச்.ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தமிழகத்தில் மதுபான கடைகள் அதிகளவில் திறப்பதால் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லை அடுத்துள்ள சில்வார்பட்டி பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை திறந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்று பாரதிய ஜனதா கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப் போராடத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஹெச்.ராஜா அவர்கள்,
தமிழகத்தில் மதுக்கடைகளை அதிகமாக திறப்பதால் ஆண்கள் மத்தியில் ஆண்மை தன்மை குறைந்ததுள்ளதாகவும் அதனால் குழந்தையின்மை பிரச்சனை குடும்பங்களுக்கிடையில் பிரிவுகளை உண்டாகிறது.
இந்தக் கடைகளினால் இன்றைக்கு தமிழன் இயற்கையாக தன் மனைவிக்கே குழந்தை பெற்றுத்தர முடியாத நிலைமைக்கு வந்துவிட்டான்.
ஆகையால்தான் இப் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அணுகுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் தான் தமிழகத்தின் எல்லா மூலைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையம் அதிகரித்துள்ளது என கூறினார்.
மேலும் இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்து அருகே உள்ள ரெட்டியார்சத்திரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a comment