ஐ.பி.எல் 2021 இன் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் சென்னை – கொல்கெத்தா அணிகள் இன்று மோதுகின்றன.
டுபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கெத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொள்ளவுள்ளன.
சென்னை அணியின் துடுப்பாட்டம் மிகச் சிறப்பாக உள்ள நிலையில், கொல்கெத்தா அணியும் அவர்களுக்கு சளைத்தவர்களில்லை என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டிகளில், சென்னை அணி 3 முறையும், கொல்கெத்தா அணி 2 முறையும் கோப்பைகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.