இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர்,
டெல்லி மற்றும் அயல் மாநிலங்களில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் மாசுபாட்டை குறைப்பதற்கான வழிகளை ஆய்வுசெய்து வருகிறோம். டீசல் பேருந்துகளை இயக்குவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து வருகிறது.
ஆகையால், இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது மெட்ரோ ரெயில் போன்ற போக்குவரத்து அமைப்பாகும். மணிக்கு சுமார் 100 கி.மீ. வேகத்தில் இந்த பேருந்துகளில் பயணிக்கலாம்.
இந்தியாவின் முதல் பறக்கும் பேருந்து டெல்லி மற்றும் அரியானாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றால் நாட்டின் அனைத்து பெருநகரங்களுக்கும் பறக்கும் பேருந்துகள் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.
#India
Leave a comment