usa china
செய்திகள்உலகம்

மிரட்டும் சீனா – எதிர்க்கும் அமெரிக்கா

Share

பீஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா அமெரிக்கா உட்பட பல நாடுகளை மிரட்டியுள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில் வரும் மாசி மாதம் 4-ம் தேதி முதல் 20-ம்தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி இடம்பெறவுள்ளது.

சீனாவில் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனாவிற்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ராஜ்ய ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு அரசு அதிகாரிகளை அனுப்ப மாட்டோம் எனவும் வீரர்களை மட்டும் அனுப்புவோம் எனவும் அறிவித்துள்ளன.

இந்நிலையில், தம் மீது வீணாக பழிபோட்டு ஒலிம்பிக் போட்டியில் அரசியல் செய்வதாக அமெரிக்கா நிறுத்த வேண்டும்.

அத்தோடு போட்டியைப் புறக்கணிக்கும் நாடுகள் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் சீனா கடும் மிரட்டல் விடுத்துள்ளது.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...